உலகம் உங்கள் கையில் – விலை இல்லா மடிக்கணினி வழங்கும் விழா
சீனிவாசா சுப்பராயா அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இலவச மடிக்கணினி வழங்கும் விழா சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் திரு. M.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச மடிக்கணினியை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முனைவர் அ குமார், துணை முதல்வர் திரு A. ஆரோக்கியராஜ் மற்றும் அனைத்து துணைத் தலைவர்கள், ஆசிரியர்கள் ஆசிரியர் அல்லா ஊழியர்கள், அலுவலக கண்காணிப்பாளர் திரு.M.இளஞ்செழியன் அவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மின்னியல் துறை விரிவுரையாளரும், YRC ஒருங்கிணைப்பாளருமான முனைவர்.B தாமரைச்செல்வி அவர்கள் மேற்கொண்டனர்.
