SSGPTC மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை (2025) வழங்கும் விழா

by | Aug 1, 2025

சீனிவாசா சுப்பராய பாலிடெக்னிக் கல்லூரியில், முன்னாள் மாணவர்கள் சார்பாக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை (2025) வழங்கும் விழா  30-07-2025 அன்று நடைபெற்றது.

இந்த விழாவிற்கு இக்கல்லூரியின் முன்னாள் மாணவரும், முன்னாள் முதல்வருமான முனைவர் T. தங்கமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் A. குமார் அவர்கள் தலைமை தாங்கினார்.

விழாவிற்கான வரவேற்புரையை கல்லூரியின் துணை முதல்வர் திரு ஆரோக்கியராஜ் அவர்கள் வழங்கினார்.

ஓய்வு பெற்ற பொறியாளர்கள் (முன்னாள் மாணவர்கள்) திரு. நடராஜன்        (போக்குவரத்து துறை) திரு. சிவராசு, திரு. முத்து, திரு. ராதாகிருஷ்ணன், திரு. கார்த்திகேயன், திரு. பன்னீர்செல்வம், திரு. நடராஜன் (வேளாண்மை துறை) திரு. சம்பத், திரு. பரமநாதன் ஆகியோரால் 12 மாணவ மாணவிகளுக்கு தலா 5000 வீதம் மொத்தம் ரூ.60000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டது .

இந்த விழாவிற்கான ஏற்பாட்டினை கல்லூரியின் வேலை வாய்ப்பு அதிகாரி முனைவர் M. பிரேம்நாத் அவர்கள் மேற்கொண்டு இருந்தார்.