CONVOCATION 2025

by | Mar 23, 2025

2025 ஆம் ஆண்டிற்கான பட்டயமளிப்பு விழா சீனிவாச சுப்பராய அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இக்கல்லூரியின் முன்னாள் மாணவரும், முன்னாள் முதல்வருமான முனைவர் T.தங்கமணி அவர்கள் கலந்து கொண்டு சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கினார்.

கல்லூரியின் முதல்வர் முனைவர் DR.A. குமார் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

இயந்திரவியல் துறை தலைவர் முனைவர் R.செந்தில்குமார் அவர்கள் வரவேற்பு உரை வழங்கினார்

துணை முதல்வர் A. ஆரோக்கியராஜ் கலந்துகொண்டு மாணவர்களை வரவேற்று சிறப்புரை ஆற்றினர்.

நிகழ்ச்சியை கணினி பொறியியல் துறை விரிவுரையாளர் முனைவர் R.சத்யா அவர்கள் தொகுத்து வழங்கினார்

இந்த விழாவில் கல்லூரியின் கண்காணிப்பாளர் திரு .வைத்தியநாதன் மற்றும் அனைத்து துறை தலைவர்கள் , ஆசிரியர் பெருமக்கள் , ஆசிரியர் அல்லா ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இறுதியாக முதலாம் ஆண்டு விரிவுரையாளர் முனைவர் R.புனிதா அவர்கள் நன்றியுரை வழங்கினார்

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு அதிகாரி முனைவர் M.பிரேம்நாத் அவர்கள் மேற்கொண்டார்.c