Rules & Regulations
1. மாணவர்கள் பொது நடத்தை :
- ஒவ்வொரு மாணவனும் முதல்வரை, ஆசிரியரை முதல் முறை பார்க்கும் பொழுது கண்டிப்பாக வணக்கம் செலுத்த வேண்டும்.
- ஆசிரியர் வகுப்பை விட்டு வெளியே செல்லும் முன்போ அல்லது அனுமதி பெறாமலோ மாணவர்கள் வகுப்பை விட்டு வெளியே செல்லக்கூடாது.
- வேலை நேரங்களில் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் சுற்றுதல் கூடாது.
- கல்லூரியின் சொத்து மற்றும் அறைகலன்களை சேதம் விளைவிக்காமல் கையாள வேண்டும்.
- கல்லூரிக்குள் புகை பிடித்தல் மற்றும் போதை பொருட்களை பயன்படுத்துதல் கடுமையாக தடுக்கப்படுகிறது.
- கல்லூரிக்குள் கைப்பேசி வைத்திருக்கவோ, பயன்படுத்தவோ கூடாது.
- ஒழுங்கீனங்கள் மற்றும் சரியற்ற நடத்தைகளுக்கு அபராதம் (அ) தற்காலிக (அ) நிரந்தர நீக்கம் போன்ற தண்டனை கிடைக்கும்.
- வகுப்பு தொடங்குவதற்கு குறைந்தது பத்து நிமிடங்களுக்கு முன்பே மாணவர்கள் வகுப்பில் இருத்தல் வேண்டும். காலம் தாழ்த்தி வருபவர்கள் வகுப்பிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- முதல்வர் அல்லது துறைத் தலைவர் அனுமதி இன்றி வகுப்பிலோ அல்லது ஆய்வுக்கூடத்திலோ மாணவர்களை யாரும் சந்திக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- எந்த மாணவரும் முதல்வரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எக்காரணத்திற்க்காகவும் பணம் வசூலிக்கக்கூடாது.
ஒழுக்கம் மேன்மையைத் தரும்
ஒழுக்கம் மேன்மையைத் தருவதால், ஒழுக்கமுடைமையை ஒருவன் தனது உயிரினும் மேலானதாகப் போற்றிக்கொள்ள வேண்டும்.
2. உடை விதிகள்:
- கல்லூரி வகுப்பு நேரங்களில் மாணவர்கள் சுத்தமான அரைக்கை சீருடை அணிய வேண்டும்.
- செய்முறை வகுப்பிற்கு மாணவிகள் மேல் சட்டை அணிய வேண்டும்.
- மாணவ, மாணவியர் அனைவரும் கால்களை மூடிய காலணி அணிய அறிவுறுத்தப் படுகிறார்கள்.
- வெளி வேலையின்போது தொப்பி அணிய வேண்டும்.
3. பகடிவதை குறித்த எச்சரிக்கை:
- தமிழக அரசின் பகடிவதை (Rassing) சட்டத்தின் விதி 1997 – ன் படி கல்லூரி வளாகத்தின் உள்ளேயும் வெளியேயும் பகடிவதை தடை செய்யப்பட்டுள்ளது.
- மாணவர்களை உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ துன்புறுத்துதலுக்கு உள்ளாக்கும் பகடிவதை ஒரு மன்னிக்க முடியாத குற்றமாகும். மேலும் இது ஒரு தண்டிக்கதக்க செயலாகும்.
- நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பகடிவதையில் ஈடுபடும் மாணவர்களுக்கு 2 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.25,000 வரை அபதாரமும் விதிக்கப்படும்.
- தண்டிக்கப்பட்ட மாணவர்கள் கல்லூரியில் இருந்து நீக்கப்படுவதுடன் வேறு எந்த கல்லூரியிலும் சேர்ந்து படிக்க இயலாத நிலை ஏற்படும்.
- எவரேனும் பகடிவதை பற்றி புகாரினை முதல்வரிடம் தெரிவித்தால் பகடிவதை தடுப்பு கமிட்டி முன்னிலையில் அதை அவர் பரிசிலனை செய்வார். முதல்வரின் முடிவே இறுதியானதாகும்.
Ref: 1.G.O.Ms. No.469 ES & T/dated 25 -04 – 1989
Ref : 2. D.T.E. Lr. No. 109717 / J3 /88 dated 22-09-1989
4. வாரியத் தேர்வுகள்:
4.1 வாரியத் தேர்வு எழுதுவதற்கான நிபதந்தனைகள்
- மாணவரது வருகைப்பதிவு மாதம் ஒருமுறை கணக்கிடப்பட்டு வலைதளத்தில் தொழில் நுட்பக் கல்வி இயக்கத்திற்கு அனுப்பி வைக்கப்படும். பருவ முடிவில் 80 % வருகைப்பதிவு இல்லை என்றால் அவர்களுடைய நுழைவுச்சீட்டு நிறுத்தப்பட்டு வாரியத் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.
- எந்த பருவத்திலும் மாணவரது வருகைப்பதிவு மற்றும் பிறவற்றில் திருப்தியின்மையிருப்பின் அந்தப் பருவத்தை மீண்டும் படித்தல் வேண்டும்.
- மருத்துவ அடிப்படையில் விடுப்பு எடுத்திருந்தால் முதல்வரின் பரிந்துரையின்படி 10% வருகைப்பதிவு விலக்கு அளிக்கப்படும்.
- குறிப்பிட்ட நாட்களுக்கு தேர்வுக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் படிப்பை தொடர இயலாது.
- தேர்வுக் கட்டணம் செலுத்தி, வருகைப் பதிவு குறைவாக இருப்பின் நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெற்றாலும் முன் பருவத்தில் தவறிய தேர்வுகள் மட்டுமே எழுத அனுமதிக்கப்படுவர்.
4.2. தேர்ச்சி அடைந்த மாணவர்களை தரப்படுத்துதல் :
முதலாம் ஆண்டில் இருந்து பயிலும் மாணவர்கள் பட்டயப்படிப்பை முடிக்க ஆறு ஆண்டுகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. நேரடி இரண்டாம் ஆண்டில் சேர்ந்தவர்கள் 5 ஆண்டுகளுக்குள் படிப்பை முடித்து தேறிட வேண்டும்.
சிறப்பு தகுதியுடன் கூடிய முதல் வகுப்பைப் பெற :
- முதலாமாண்டைத் தவிர மற்ற பருவத் தேர்வுகளின் சராசரி மதிப்பெண் 75-க்கு குறையாமல் பெற்றிருக்க வேண்டும்.
- எல்லாப் பருவத்தேர்வுகளிலும் முதல் முறையிலேயே தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.
- முதலாண்டு உள்பட எல்லாப் பாடங்களையும் குறிப்பிட்ட 3 ஆண்டுகளுக்குள் இடைவெளியில்லாமல் முடித்திருக்க வேண்டும்.
முதல் வகுப்பைப் பெற :
முதலாமாண்டைத் தவிர மற்ற பருவத் தேர்வுகளில் சராசரி மதிப்பெண் 60-க்கு குறைவாக இருத்தல் கூடாது.
முதலாமாண்டு உட்பட அனைத்து பாடங்களையும் குறிப்பிட்ட 3 ஆண்டுகளுக்குள் இடைவெளியில்லாமல் முடித்திருக்க வேண்டும்.
இரண்டாம் வகுப்பு :
மேற்கூறியவற்றைத் தவிர மற்ற தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராவர்.
4.3. வாரியத் தேர்வு மதிப்பெண்கள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் :
- மாணவர்கள் முதலில் விடைத்தாள்கள் நகல்பெற மட்டுமே ரூ.100/- செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். நேரடியாக மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
- மாணவர்கள் பயிலக முதல்வர் மூலமாக விடைத்தாள் நகலை கோர, தேர்வு முடிவு வெளியிட்டபின் விண்ணப்பிக்கலாம்.
- விடைத்தாளின் நகல், தேர்வு வாரிய அலுவலகத்தில் இருந்து முதல்வருக்கு அனுப்பி வைக்கப்படும். மாணவர்கள் விடைத் தாளை பரிசீலித்து குறைபாடுகள் இருப்பின், குறிப்பிட்ட காலத்திற்கு ஏற்ப ரூ. 400/- செலுத்தி மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.
- மறு மதிப்பீட்டு முடிவுகள் பயிலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். மறு மதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் இருப்பின், ஏற்கனவே வழங்கப்பட்ட மதிப்பெண் பட்டியல் திரும்பப் பெறப்பட்ட மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும்.
4.4. நிறுத்தப்பட்டமதிப்பெண்தாள்கள் திரும்பப்பெற விண்ணப்பித்தல்:
தொழில் நுட்பக் கல்வி இயக்கத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட மதிப்பெண் தாள்களை பெற முதல்வரால் சான்றொப்பமிடப்பட்ட முந்தைய மதிப்பெண் தாள்களுடன் உரிய படிவத்தில் தொழில் நுட்பக் கல்வி இயக்கத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
4.5 வாரியத் தேர்வில் ஒழுங்கீனம் குறித்த எச்சரிக்கை :
வாரியத் தேர்வில் ஒழுங்கீனச் செயலில் ஈடுபடும் மாணவர்கள் கடுமையான முறையில் தண்டிக்கப்படுவர். எக்காரணத்தை முன்னிட்டும் ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்ட பின்னர் மன்னிப்பு கோரினால் அச்செயலை அங்கிகரிக்க இயலாது. தேர்வுக் கூடத்திலிருந்து ஓடுவதோ அல்லது தேர்வுக் கண்காணிப்பாளரோடு தர்க்கம் செய்தாலோ மிகமிகக் கடுமையான தண்டனை ஏற்றாற்போல் வழங்கப்படும்.
கீழே குறிப்பிட்டவைகள் தேர்வுக் கூடத்தில் நடைபெறும் ஒழுங்கீனச் செயல்களாகக் கருதப்படும்.
- தேர்வுக் கூடத்தில் அடுத்து இருப்பவருடன் பேசுதல் அல்லது விடைத்தாள்களை அடுத்தவருக்கு காண்பித்தல்.
அன்றைய தேர்விற்கான அல்லது அந்தத் தேர்விற்கு சம்பந்தமில்லாத எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட துண்டுச் சீட்டுகள் வைத்திருத்தல். - தேர்வுக் கூடத்தில் விடைத்தாள்களை அல்லது கூடுதல் விடைத்தாள்களை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்வதும் மாற்றி வைத்தலும்.
- படம் அல்லது வேறு வித விவரங்களை வினாத்தாள், மேஜை, நுழைவுச்சீட்டு, அளவுகோல், வரைபட உபகரணங்களில் எழுதி வைத்தல் அல்லது மாணவர் தங்கள் உடலில் எந்த ஒரு பகுதியிலாவது எழுதி வைத்தல்.
- ஒழுங்கீனச் செயல்கள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் தடயங்களை அழித்தல், துண்டுச் சீட்டுகளை விழுங்குதல் அல்லது தூர எறிய முயலுதல்.
- ஒழுங்கீனச் செயலுக்கான விவரங்களை தர மறுத்தல்.
- விடைத்தாளில் பதிவு எண்ணை தேவையற்ற இடத்தில் எழுதுதல். 8. வேறு நபரோடு பொருட்களை பரிமாற்றம் செய்தல்.
- விடைத்தாளில் வேண்டுகோள் விடுத்தல், தேவையற்ற விவரங்களை எழுதி வைத்தல்.
- முதன்மை கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் அறை கண்காணிப்பாளரிடம் முறை கேடாக நடந்து கொள்ளுதல்.
- தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தல்.
- கைப்பேசி வைத்திருத்தல்
- மேலே குறிப்பிட்டுள்ள ஒழுங்கீனச் செயல்களோடு தொடர்புடைய பிற செயல்கள் அனைத்தும் ஒழுங்கீனச் செயல்களாகும்.
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
5. பாடப்பிரிவு மற்றும் பாடத்திட்டம்:
5.1 கற்பிக்கப்படும் பாடத் திட்டங்கள்:

5.2 சேர்க்கைக்கான குறைந்த பட்ச கல்வி தகுதி
5.2.1 முதலாம் ஆண்டு
10- ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேர்க்கைக்குத் தகுதி உள்ளவர்கள் ஆவர். வயது வரம்பு இல்லை.
5.2.2 நேரடி இரண்டாம் ஆண்டு
தமிழ்நாட்டில் பணிரெண்டாம் வகுப்பு (Vocational Group) & Academic அல்லது (I.T.I) படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், நேரடி இரண்டாம் ஆண்டில் சேரத் தகுதியுள்ளவர்கள் ஆவார்கள்.

ஒழுக்கத்தினால் தன் நிலையில் எய்த முடியாத உயர்ச்சியை அடைவர்; ஒழுக்கம் தவறுவதால், தம்மால் நினைத்துப் பார்க்க முடியாத பழியை அடைவார்கள்.
(5.3 படிப்பை முடிப்பதற்கான விதிமுறைகள்:
- ஒவ்வொரு பருவம் முடிந்தவுடன் மாணவர்கள் கண்டிப்பாக அந்தப்பாடங்களுக்கு உடன் நடக்கும் தேர்வுக்கும் ஏற்கனவே பருவ தேர்வுகளில் தேர்ச்சியைத் தவறிய அனைத்து பாடங்களுக்கு உண்டாண தேர்வுகளுக்கும் பதிவு செய்து கொண்டு வாரியத் தேர்வு எழுத வேண்டும்.
- மேலே பிரிவு 1 ல் குறிப்பிட்டபடி தேர்வுக்கு பதிவு செய்யாவிடில் அல்லது தேர்வு எழுதாவிட்டால் அடுத்த பருவத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.
- படிக்கும் காலவத்தில் தொடர்ச்சியாக ஐந்து வருடங்களுக்கு மேல் இடைவெளி இருந்தால் படிப்பை தொடரவோ தேர்வு எழுதவோ அனுமதிக்கப்படமாட்டார்கள்.
- வாரியத் தேர்வில் தேர்ச்சியடைய எழுத்துத் தேர்வில் 40 செய்முறைத் தேர்வில் 50 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும் மாணவர்களால் எழுதப்படும் செய்முறைப் பாடக்குறிப்புகளைப் பதிவு செய்வதற்கு 25 (Internal) மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு பாடத்திற்கும் அகமதிப்பீடு (Internal) 25 மதிப்பெண்களும், எழுத்து தேர்விற்கு 75 மதிப்பெண்களும் ஒதுக்கப்படும்.
- எழுத்து தேர்வில் தேர்ச்சிபெற 75 மதிப்பெண்களுக்கு 30 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.(M-SCHEME)
- முதலாண்டில் சேர்க்கப்பட்ட முழு நேர டிப்ளமோமாணவர்கள் படிப்பை பூர்த்தி செய்து தேர்ச்சி பெற அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச காலம் ஆறு ஆண்டுகளாகும்.
- மூன்றாம் பருவத்தில் சேர்க்கப்பட்ட பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் I.T.I படித்த மாணவர்கள் படிப்பை பூர்த்தி செய்து தேர்ச்சி பெற அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச காலம் ஐந்து ஆண்டுகளாகும்.
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்று இடும்பை தரும்.
5.4 மாற்றுச் சான்றிதழ் :
- மாணவர்களுக்கு பட்டயச் சான்றிதழ் வழங்கும்போது மட்டுமே மாற்றுச்சான்றிதழ் வழங்கப்படும்.
- மாணவர்கள் மாற்றுச் சான்றிதழைத் தவறவிட்டால் ரூ. 100/- செலுத்தினால் இரண்டாம் படி மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும்.
- மாணவர்கள் இரண்டாம்படி மாற்றுச் சான்றிதழையும் தவறவிட்டால் திரும்பவும் இரண்டாம்படி மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது.
5.5 படிப்பு முறிவு விதிமுறைகள் :
தேர்வுக் கட்டணம் செலுத்திய போதிலும் தான் பயிலும் பருவத்தின் ஒரு தேர்வு கூட எழுதாத மாணவர்கள் படிப்பை தொடர்ந்து மேற்கொள்ள அனுமதிக்கப்படமாட்டார். அவரது படிப்பு முறிவு ஏற்படும். அம்மாணவர் மறு சேர்க்கை அடிப்படையில் வரும் அடுத்த கல்வியாண்டில் மீண்டும் விடுபட்ட அதே பருவத்தில் இருந்து பயில அனுமதிக்கப்படுவார்.
5.6 மறுசேர்க்கை விதிகள் :
- மாணவருக்கு தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளுக்கு மேல் படிப்பு முறிவு ஏற்பட்டால், அவருக்கு மறு சேர்க்கை பரிந்துரைக்கப் படமாட்டாது.
- பயிலக இடமாறுதல் கோரும் மாணவர்கள் இடமாற்றுதல் ஆணை பெறுவதற்கு முன்னரே சொந்த விருப்பில் மாற்றுச் சான்றிதழ் பெற்றால், மற்ற பயிலகங்களில் மறு சேர்க்கை செய்ய அனுமதிக்கப்படவேண்டும்.
- தேர்வில் ஒழுங்கீனமாக நடந்தமைக்காக தண்டனை வழங்கப்பட்டால் தண்டனைக்காலம் முடியும் வரையில் வேறு பயிலகத்தில் மறு சேர்க்கை பெற அனுமதிக்கப்படமாட்டார்கள்.
- சேர்க்கை, தேர்வு முடிவு, தண்டனை போன்ற காரணங்களுக்காக நீதிமன்றத்தில் ஏதும் விண்ணப்பம் நிலுவையில் இருந்து படிப்பு முறிவு ஏற்பட்டிருந்தால் கல்வி இயக்க ஆணையரின் அனுமதி பெறாமல் மறு சேர்க்கை பெற இயலாது.
- முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு படிப்பு முறிவு ஏற்பட்டால் மறுசேர்க்கை கிடையாது.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
