வரலாறு 

ஈட்டியதெல்லாம் இதன்பால் உள்ளது என்பதற்கிணங்க. தங்களை கல்விக்காக அர்ப்பணித்த வள்ளல்கள் திரு. சு. சபாரு முதலியார், மற்றும் திரு. சீ. சீ. தியாகராஜ முதலியார் ஆகியோரால் 1960-ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 17-ஆம்நாள் துவக்கப்பட்டது இப்பயிலகம் சீர்காழி – சிதம்பரம் நெடுஞ்சாலையில் 24-ஹெக்டர் பரப்பளவில் அனைத்து வசதிகள் உபகரணங்கள், விளையாட்டுக் திடல் உட்பட அமைக்கப்பட்டு 1968-வரை தனியார் நிர்வாகமாக இயங்கி வந்தது. பின்பு தாளாளர்களால் இப்பயிலகம் அரசு வசம் ஒப்படைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு ஆணை எண். M/S. 1471 நான் 12-10-89-ன்படி 3-1-1969 முதல் அரசு பாலிடெக்னிக்காக தொழில்நுட்பக்கல்லூரி ஆணையர் அவர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க

மாணவ/மாணவியர் விடுதி : 

இப்பயிலகத்தில் பயிலும் மாணவர்கள் 180-பேர் தங்கக்கூடிய வசதியுடன் மாணவர்கள் விடுதியும், 50-மாணவிகள் தங்குவதற்கு மாணவியர்கள் விடுதியும் நடத்தப்படுகிறது. மேலும் பங்கீட்டுக் கட்டண முறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த ஆண்டு முதல் 50-மாணவியர்கள் கூடுதலாக தங்க புதிய விடுதி கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. 

உடற்பயிற்சி கல்வித்துறை: 

இப்பயிலகத்தில் இத்துறை சிறப்புடன் இயங்கிவருகிறது. மேலும் அனைத்து விளையாட்டுத்திடல்கள் மற்றும் தடகளப் போட்டிகள் நடைபெறும் வண்ணம் மிகப்பெரிய மைதானத்தைக் கொண்ட இப்பயிலகத்தில் மாணவ/ மாணவியருக்கு வருடந்தோறும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் மாவட்ட, மாநில அளவில் அனைத்து பயிலகங்களும் இடையே நடைபெறும் போட்டிகளிலும் இப்பயிலக மாணவ/மாணவியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டு பரிசுகள் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நாட்டு நலப்பணித் திட்டம் : 

தன்னார்வமிக்க மாணவ/மாணவியர் 100-பேர் கொண்ட நாட்டு நலப்பணித் திட்டம் 1985-ம் ஆண்டு முதல் இப்பயிலகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அவ்வப்போது அருகில் உள்ள சுற்றுப்புற கிராமங்களுக்குச் சென்று முகாமிட்டு, இந்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் ஆணையின்படி இணையற்ற தொண்டுகளை ஆற்றி வருகிறது. 

நூலகம்: 

புத்த வங்கி, உலக வங்கி உட்பட மொத்தம் 15,000 புத்தகங்கள் மற்றும் மாத, வார தொழில் நுட்பத் தகவல்கள் கொண்ட இதழ்களைக் கொண்டு இயங்கி வருகிறது. மாணவ/மாணவியர் நலனுக்காக கல்வி தனப்பேழை (Educational vidieo Cassette) வழங்கப்பட்டு நல்ல ‘முறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 

மேலும் கணிப்பொறி மற்றும் நகல் எடுக்கும் இயந்திரம் முதலியவை மாணவர்/மாணவியர் பயன்பாட்டிற்காக நூலகத்தில் உள்ளது. பார்கோடுடன் கூடிய நூலக அடையாள அட்டை மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 

மாணவர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிக்கு வழி காட்டல் : 

இறுதியாண்டு முடித்துச்செல்லும் மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பிற்கு பெயர் பட்டியல் உரிய அலுவலகம் / தொழில் துறைக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைக்கப்பட்டு பட்டய மாணவர் / மாணவியருக்கு நல்ல எதிர்காலத்திற்கு வழிகாட்டல் செய்யப்பட்டு வருகிறது.

Srinivasa Subbaraya Polytechnic College was established in 1960. It is affiliated to Directorate of Technical Education, Chennai and apporved by AICTE. Located in Puthur, Sirkali Taluka, Nagapattinam – 609108.

Vision and mission

The vision of our college is to be a leading institution in providing quality technical education and training that meets the needs of industry, community, and society. The mission of a polytechnic college is to provide an innovative and relevant learning experience that prepares students for successful careers in technical fields and development that addresses real-world challenges and contributes to the advancement of technology.

    • Providing practical and hands-on training that prepares students for the workforce.
    • Collaborating with industry to ensure that the curriculum is aligned with the job market’s needs.
    • Developing the skills of the students in critical thinking, problem-solving, and teamwork.
    • Encouraging entrepreneurship and supporting the growth of small businesses in the community.
    • Promoting social responsibility by developing programs that address the needs of the community.